UPSC தமிழ் விருப்பப் பாட மாணவர்களுக்குத் தேவிராவின் நூல்கள்
( கீழே உள்ள நூல்கள் தேவிராவிடம் தமிழ் விருப்பப் பாடம் படிக்க வரும் மாணவர்களுக்கு மட்டும் நேரில் வழங்கப்படும். இவை விற்பனைக்கு அல்ல )
தேவிராவின் தமிழ் மொழியும் இலக்கியமும்
தாள் -1. பகுதி – அ என்ற பகுதியில் உள்ள திராவிட மொழிக்குடும்பம் முதல் பிற்கால இலக்கியங்கள் வரைக்கான 69 கட்டுரைகளின் தொகுப்பு நூல்.
தேவிராவின் தமிழ் இலக்கியத் திறனாய்வும் பண்பாடும்
தாள் -1. பகுதி – ஆ என்ற பகுதியில் உள்ள திறனாய்வு அணுகு முறைகள் முதல் இக்காலத் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு மாற்றத்தில் தகவல் தொடர்பு சாதனங்களின் பங்கு வரைக்கான 58 கட்டுரைகளின் தொகுப்பு நூல்.
தேவிராவின் இந்திய ஆட்சிப்பணித் தேர்வு-தமிழ் (தாள் 2) இலக்கியல்கள்
குறுந்தொகை – புறநானூறு – திருக்குறள் – சிலப்பதிகாரம் – கம்பராமாயணம் – திருவாசகம் – திருப்பாவை – கண்ணன் பாட்டு – குடும்ப விளக்கு – ஏ!தாழ்ந்த தமிழகமே – முத்துப்பட்டன் கதை – மலையருவி(அறிமுகம்) – ஆகிய இலக்கியங்களின் தொகுப்பு நூல்.
தேவிராவின் இந்திய ஆட்சிப்பணித் தேர்வு-தமிழ் இலக்கிய உரைகள்
குறுந்தொகை – புறநானூறு – சிலப்பதிகாரம் – கம்பராமாயணம் – திருவாசகம் – திருப்பாவை ஆகிய நூல்களின் பாடல்களுக்கான உரைவிளக்கம்.
தேவிராவின் இந்திய ஆட்சிப்பணித் தேர்வு-தமிழ் (தாள் 2) ஆய்வுக்கட்டுரைகள்
தமிழ் – தாள் -2 ல் உள்ள பாட நூல்களை ஒட்டி எழுதப்பட்ட 70 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்.
upsc தமிழ் வினாத் தொகுப்பு
தமிழ்ப் பாடத்திட்டம் – 2019 அசல் (ORIGINAL ) வினாத்தாள் – 2011 முதல் 2018 வரையிலான அசல் வினாக்கள், பாடநூல்வாரியாகப் பிரித்துத் தொகுக்கப்பட்ட தொகுப்பு ஆகியன இடம்பெற்றுள்ளன.
இவற்றுடன் திருக்குறள் – தேவிரா உரை, கருப்பு மலர்கள், அறமும் அரசியலும், குருபீடம், சித்திரப்பாவை, யாருக்கும் வெட்கமில்லை ஆகிய நூல்களும் சேர்த்துத் தேவிராவிடம் upsc தமிழ் விருப்ப்பாடம் படிக்க வரும் மாணவர்களுக்கு அளிக்கப்படும். இதில் உள்ள தேவிராவின் நூல்கள் விற்பனைக்கு இல்லை.
தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம்
தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ் குறித்த பிற செய்திகள் என 90 ஆயிரம் தகவல்களையும் 640 பக்கங்களையும் கொண்ட நூல். TNPSC தேர்வுக்கும், தமிழ் NET,SET தேர்வுக்கும் மிகவும் பயன்படும் நூல். விலை ரூ 280/- முதல் பதிப்பு 2007
தேவிராவின் குரூப்- II & குரூப் II – A முதன்மைத் (Main ) தேர்வு வழிகாட்டி
தாள் 1. மொழிபெயர்ப்பு – தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு தாள் 2. – சுருக்கி வரைதல் முதல் கடிதம் வரைதல் வரை உள்ள பகுதிகளுக்குரிய விளக்கங்கள், கட்டுரைகள், பயிற்சிகள் அடங்கிய நூல். 328 பக்கங்கள். விலை ரூ 250/- ( இலவச இணைப்பு: திருக்குறள் – தேவிரா உரை, கையடக்கப்பதிப்பு) முதல் பதிப்பு 2020
தேவிராவின் TNPSC பொதுத் தமிழ்
புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டது. இலக்கணம், இலக்கியம் சான்றோர்கள் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டது. குறிப்பாகக் குரூப் iv தேர்வுக்கு மிகவும் பயன்படும் நூல்.464 பக்கங்கள். விலை ரூ 350/- முதல் பதிப்பு 2020
தேவிராவின் போட்டித் தேர்வுக்கான இந்திய வரலாறும் இந்திய தேசிய இயக்கமும்
புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டது. இந்திய வரலாறு, இந்திய தேசிய இயக்கம், உலக நிகழ்வுகள், 1200 வினாக்களும் விடைகளும் என்ற நான்கு பகுதிகளை உடையது. A4 தாளில் 448 பக்கங்கள். விலை ரூ 340/- முதல் பதிப்பு 2020
தேவிராவின் போட்டித் தேர்வுக்கான இந்திய அரசமைப்பும் இந்திய ஆட்சியியலும்
புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டது. இந்திய அரசமைப்பு, மத்திய அரசு, மாநில அரசு, யூனியன் பிரதேசங்கள், கூட்டாட்சி, தேர்தல் ஆணையம், தேர்வாணையம், அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள்., ஊழல், ஊழல் தடுப்பு, பெண்ணியம், இந்தியப் பாதுகாவல், தீவிரவாதம், உலக நிறுவனங்கள், 500 வினாக்களும் விடைகளும் எனப் பலவும் அடங்கிய நூல். —— பக்கங்கள், அச்சுக்குச் செல்ல உள்ளது
தேவிராவின் தமிழ் இலக்கணம்
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி இலக்கண விளக்கங்கள், மொழியியல், 20 இலக்கணக் கட்டுரைகள் என இலக்கணம் குறித்த பலவும் உள்ளடக்கியது . இலக்கண அகராதி போன்றது. தற்காலப் புதிய எடுத்துக்காட்டுகளுடன்ஆழமான இலக்கணங்களையும் எளிமையாக விளக்குவது. 676 பக்கங்கள். விலை ரூ300/- முதல்பதிப்பு 2014
புதுக்கவிதை இலக்கணம்
இலக்கணம் இல்லாத புதுக் கவிதைகளையும் ஓர் இலக்கணத்திற்குள் அடக்க முயலும் நூல். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் வகுக்கின்றது. 21 ஆம் நூற்றாண்டின் முதல் இலக்கண நூல். நூற்பா – விளக்கம் – சான்று மேற்கோள் என அமைந்தது. 214 பக்கம். விலை ரூ150/- முதல் பதிப்பு 2004
நன்னூல் – எழுத்ததிகாரம் தேவிரா உரை
நுட்பமான கருத்துகள், எளிமையான நடை, இக்காலத்திற்கு ஏற்ற புதிய எடுத்துக்காட்டுகள் அமைந்து இலக்கணத்தை எளிமையாக விளங்கிக்கொள்ள உதவும் நூல். 232 பக்கங்கள். விலை ரூ125/-முதல் பதிப்பு 2016.
நன்னூல் – சொல்லதிகாரம் தேவிரா உரை
நுட்பமான கருத்துகள், எளிமையான நடை, இக்காலத்திற்கு ஏற்ற புதிய எடுத்துக்காட்டுகள் அமைந்து இலக்கணத்தை எளிமையாக விளங்கிக்கொள்ள உதவும் நூல். 242 பக்கங்கள். விலை ரூ125/-முதல் பதிப்பு 2016.
நம்பி அகப்பொருள் தேவிரா உரை
நூற்பா கூறும் துறைகளுக்கு எண் கொடுத்து விளக்குகிறது. சிலவற்றுக்குச் சான்றுபாடல்கள் உள்ளன. பாடலின் பொருள் தரப்பட்டுள்ளது. . 180 பக்கங்கள். விலை ரூ100/-முதல் பதிப்பு 2016.
புறப் பொருள் வெண்பா மாலை தேவிரா உரை
நூற்பா, கொளு, கொளுவில் கூறப்பட்டுள்ள துறைகள், வெண்பா என அனைத்தையும் விளக்குவது. ஒவ்வொரு விளக்கத்தின் இறுதியில் கடினச்சொற்களுக்குப் பொருள் தரப்பட்டுள்ளதால் அகராதியைத் தேடவேண்டிய அவசியமில்லை. எளிமையாகப் படிக்கத் தக்க வகையிலும் பாடம் நடத்தும் விதத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது. 328 பக்கங்கள். விலை ரூ160/-முதல் பதிப்பு 2016.
யாப்பருங்கலக்காரிகை தேவிரா உரை
எளிய விளக்கம். புதிய சான்றுகள். யாப்பின் அனைத்துக் கூறுகளையும் படிப்படியாக விளக்கிச் செல்லும் நூல். 160 பக்கங்கள். விலை ரூ100/-முதல் பதிப்பு 2016.
தண்டியலங்காரம் தேவிரா உரை
தேவிராவின் அணி இலக்கணம், தண்டியலங்காரம் என்ற இரு நூல்களை உள்ளடக்கியது. பொது அணி, பொருளணி, சொல்லணி மூன்றுக்கும் விளக்கம் தருவது.அணிகளுக்குத் திரையிசைப் பாடல்கள், திருக்குறள், கம்பராமாயணம்,ஔவையார், பாரதியார், பாரதிதாசன் பாடல்களில் இருந்து சான்றுகள் தரப்பட்டுள்ளன. தண்டி எழுதிய வெண்பாப் பாடல்களின் பொருளை விளக்கி, அந்தப் பாடல் அந்த அணிக்கு எவ்வாறு பொருந்துகிறது என்றும் கூறும் நூல். 428 பக்கங்கள். விலை ரூ180/-முதல் பதிப்பு 2018.
திருக்குறள் தேவிரா உரை
திருக்குறள் கருத்துகளை ஆழமாகவும் அதேநேரத்தில் எளிமையாகவும் விளக்கும் நூல். பொதுமக்களும் தொடர்ந்து படிக்கத் தக்க நூல். 80% பரிமேலழகர் உரையைத் தழுவியது. 544 பக்கங்கள். விலை ரூ200/-முதல் பதிப்பு 2017.
தொல்காப்பியம் சொல்லதிகாரம் தேவிரா உரை
சேனாவரையர் உரையைத் தழுவியது. தற்காலச் சான்றுகளுடன் இலக்கணத்தை விளக்குவது. இடையிடையே வினா விடை அமைப்புக் கொண்டது. 444 பக்கங்கள். விலை ரூ180/-முதல் பதிப்பு 2018.
தமிழர் வாழ்வியல்
தேவிராவும் கந்தசுவாமி நாயுடு ஆடவர் கல்லூரி, முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் ச. கனகலட்சுமியும் சேர்ந்து எழுதிய நூல். 216பக்கங்கள். விலை ரூ 200/-முதல் பதிப்பு 2011.
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் தேவிரா உரை
முதல் மெய்ப்புத்(proof) திருத்தத்தில் உள்ளது.
தொல்காப்பியம் பொருளதிகாரம் தேவிரா உரை
முதல் மெய்ப்புத்(proof) திருத்தத்தில் உள்ளது.
உலகம் – உயிர் – கடவுள்
அறிவைப் பெறுவதற்கான வழிமுறைகள் – இந்திய மதங்கள் அறிமுகம் – உலகம் – உயிர் – கடவுள் – குறித்து ஆசிரியர் மாணவர் உரையாடல் அமைப்பில் எழுதப்பட்டது. 288 பக்கங்கள் ,விலை ரூ.150/- முதற்பதிப்பு 2018