15 -10-1959 திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் பிறந்தார்.

— பெற்றோர் இட்ட பெயர் இராசேந்திரன். புனைபெயர் தேவிரா.

கல்வி

 • காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் B.Lit. பட்டம் பெற்றார்(1982)
 • சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ் மொழித்துறையில் M.A. (1984), M.Phil.(1985), Ph.D.(1994) ஆகிய பட்டங்களைப் பெற்றார்

கல்விப்பணியும் நிர்வாகப் பணியும்

 • 1986-87ல் சென்னை, கொளத்தூர், விவேகானந்தர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார்
 • 1987 முதல் 2018 வரை சென்னையில் உள்ள அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
 • உதவிப் பேராசிரியராகக் கல்லூரிப் பணியைத் தொடங்கினார்.
 • பின் தமிழ்த்துறைத் தலைவர், கல்லூரி ஆட்சிக் குழு உறுப்பினர், கல்லூரி முதல்வர் எனப் பல பதவிகளை ஏற்று நிர்வகித்தவர்.
 • மேலும், கல்லூரியில் மாலை நேரத்தில் நடைபெறும் சுயநிதிப் பிரிவில் பொறுப்புப் பேராசிரியர், கல்லூரி நிர்வாக ஆலோசகர்(Advisor), புலத்தலைவர்(Dean) ஆகிய பதவிகள் வகித்தவர்

தமிழ்ப் பயிற்சி வகுப்புகள்

 • இந்திய ஆட்சிப் பணியிலோ தமிழக அரசுப் பணியிலோ இணைந்து பணியாற்றவேண்டும் என்ற இலட்சியத்தோடு வரும் மாணவர்களைத் தன் பயிற்சி ஆற்றலின் மூலமாக அவர்களை இலக்கை அடையவைப்பதையே தமது இலட்சியமாகக் கொண்டு அவர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்து வருகிறார்
 • UPSC தமிழ் விருப்பாடத்தை 1994 முதல் 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துவருபவர். இதில் ஆழ்ந்த அறிவும் பழுத்த அனுபவமும் பெற்றவர்
 • தொடக்கத்தில் மாணவர்களுக்குத் தன் வீட்டிலேயே பயிற்சி அளித்துவந்தார்
 • பின் கணேஷ் IAS , சந்தோஷ் & சபரி அகாடமியில் பயிற்சி அளித்தார்
 • தற்போது தேவிரா தமிழ் அகாடமி (DETA) என்ற பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவருகிறார்
 • இவர் இப் பயிற்சி நிறுவனத்தில் மட்டுமே பயிற்சி அளிக்கிறார். வேறெங்கும் பயிற்சி அளிப்பதில்லை