Skip to content
9444012953info@deviratamilacademy.com
Recent posts
Hello world! Welcome Program

Devira Tamil Academy

யு பி எஸ் சி தமிழ் விருப்பப்பாட ஆர்வலர்களுக்குச் சிறந்த தமிழ்ப் பயிற்சி மையம்

  • வீடு
  • சேர்க்கை
  • வகுப்புகள்
  • புத்தகங்கள்
  • தொடர்பு
  • English
  • தமிழ்

தேவிராவின் செய்தி

முனைவர் தேவிராவைப் பற்றி

15 -10-1959 திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் பிறந்தார். — பெற்றோர் இட்ட பெயர் இராசேந்திரன். புனைபெயர் தேவிரா. கல்வி காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் B.Lit. பட்டம் பெற்றார்(1982) சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ் மொழித்துறையில் M.A. (1984), M.Phil.(1985), Ph.D.(1994) ஆகிய பட்டங்களைப் பெற்றார் கல்விப்பணியும் நிர்வாகப் பணியும் 1986-87ல் சென்னை, கொளத்தூர், விவேகானந்தர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார் 1987 முதல் 2018 வரை சென்னையில் உள்ள அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியில் பணிபுரிந்து…

மேலும் பார்க்க

சாதனைகள்

தேவிராவின் மாணவர்கள்

தேவிராவிடம் பயிற்சி பெற்றுத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் பலர் IAS, IPS, IRS போன்ற பதவிகளில் இந்தியா முழுக்கப் பணியாற்றுகின்றனர். சிலர் IFS பணியில் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பணியாற்றுகின்றனர். இவர் மாணவர்கள் சிலர் தனியே பயிற்சி வகுப்புகளையும் நடத்திவருகின்றனர். தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளில் இருந்து கிராம நிர்வாக அலுவலர் (VAO) வரை இவரின் மாணவர்கள் தமிழ்நாடு முழுக்கப் பரவியுள்ளனர்.

வெளிநாட்டுப் பயணங்கள்

இங்கிலாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், சுவிசர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி துபாய், இலங்கை

பெற்ற பட்டங்கள்

சொல்லேருழவர் – திருவள்ளுவர் மன்றம் , குரோம்பேட்டை, சென்னை, திருக்குறள் சீர் பரவுவார் – திருவள்ளுவர் பைந்தமிழ் இலக்கிய மன்றம், சென்னை 600 007. தொல்காப்பியர் விருது – இலக்குவனார் இலக்கியப் பேரவை, அம்பத்தூர், சென்னை, 600 053

எழுதிய நூல்கள்

30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர். அவை UPSC, TNPSC க்கு உரிய தமிழ் நூல்கள். B.A., M.A. மாணவர்களுக்குரிய தமிழ் இலக்கண நூல்கள். தமிழ் NET,SET எழுதும் மாணவர்களுக்கான நூல்கள்.

இவரது நூல்கள் அனைத்தையும் ‘ ஶ்ரீ நந்தினி பதிப்பகம்’ என்ற பதிப்பகத்தார் வெளியிடுகின்றனர்.

UPSC தமிழ் விருப்பப் பாட மாணவர்களுக்குத் தேவிராவின் நூல்கள்

தேவிராவின் தமிழ் மொழியும் இலக்கியமும்

தாள் -1. பகுதி – அ என்ற பகுதியில் உள்ள திராவிட மொழிக்குடும்பம் முதல் பிற்கால இலக்கியங்கள் வரைக்கான 69 கட்டுரைகளின் தொகுப்பு நூல்.

தேவிராவின் தமிழ் இலக்கியத் திறனாய்வும் பண்பாடும்

தாள் -1. பகுதி – ஆ என்ற பகுதியில் உள்ள திறனாய்வு அணுகு முறைகள் முதல் இக்காலத் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு மாற்றத்தில் தகவல் தொடர்பு சாதனங்களின் பங்கு வரைக்கான 58 கட்டுரைகளின் தொகுப்பு நூல்.

Card image cap

தேவிராவின் இந்திய ஆட்சிப்பணித் தேர்வு-தமிழ் (தாள் 2) இலக்கியல்கள்

குறுந்தொகை – புறநானூறு – திருக்குறள் – சிலப்பதிகாரம் – கம்பராமாயணம் – திருவாசகம் – திருப்பாவை – கண்ணன் பாட்டு – குடும்ப விளக்கு - ஏ!தாழ்ந்த தமிழகமே – முத்துப்பட்டன் கதை – மலையருவி(அறிமுகம்) – ஆகிய இலக்கியங்களின் தொகுப்பு நூல்.

Card image cap

தேவிராவின் இந்திய ஆட்சிப்பணித் தேர்வு-தமிழ் இலக்கிய உரைகள்

குறுந்தொகை – புறநானூறு – சிலப்பதிகாரம் – கம்பராமாயணம் – திருவாசகம் – திருப்பாவை ஆகிய நூல்களின் பாடல்களுக்கான உரைவிளக்கம்.

Card image cap

தேவிராவின் இந்திய ஆட்சிப்பணித் தேர்வு-தமிழ் (தாள் 2) ஆய்வுக்கட்டுரைகள்

தமிழ் – தாள் -2 ல் உள்ள பாட நூல்களை ஒட்டி எழுதப்பட்ட 70 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்

Card image cap

upsc தமிழ் வினாத் தொகுப்பு

தமிழ்ப் பாடத்திட்டம் – 2019 அசல் (ORIGINAL ) வினாத்தாள் – 2011 முதல் 2018 வரையிலான அசல் வினாக்கள், பாடநூல்வாரியாகப் பிரித்துத் தொகுக்கப்பட்ட தொகுப்பு ஆகியன இடம்பெற்றுள்ளன.

இவற்றுடன் திருக்குறள் – தேவிரா உரை, கருப்பு மலர்கள், அறமும் அரசியலும், குருபீடம் , சித்திரப்பாவை, யாருக்கும் வெட்கமில்லை ஆகிய நூல்களும் சேர்த்துத் தேவிராவிடம் upsc தமிழ் விருப்ப்பாடம் படிக்க வரும் மாணவர்களுக்கு அளிக்கப்படும். இதில் உள்ள தேவிராவின் ஆறு நூல்கள் விற்பனைக்கு இல்லை.

© அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை 2020

Education Base by Acme Themes

Admissions Open

Click here

×